Thursday, May 14, 2020

Corona aka Covid19



ஒரு ஊர்ல ஒரு மரம் இருந்தது அதுல நிறைய குருவிங்க வாழ்ந்துவந்தது. மழைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்க போகும் காலம். எல்லா குருவிங்களும் வெப்பம் இருக்கும் நாடுகளுக்கு இடம் பெயர ஆரம்பித்தன ஆனால் ஒரு குருவி மட்டும் 'இந்த தடவை இங்கேயே இருந்து என்னதான் நடக்குதுன்னு பார்த்திடுவோம்னு' அந்த மரத்திலேயே தங்கிவிட்டது.


ஒரு வாரம் ஆச்சி, எல்லா குருவியும் போனபின் இந்த குருவி மட்டும் ஜாலியா சுத்தி திரிஞ்சுது, போட்டியில்லாததனால் சாப்பாட்டுக்கு சிரமம் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா குளிர ஆரம்பிச்சது. ரொம்ப தூரம் பறந்து திரியாம சுத்துப் பட்டியிலேயே சாப்பாட்டு வேலைய முடிச்சிகிச்சி.


இன்னும் 2 நாள் ஆச்சி, ஊரையே தூக்கி freezer'குள்ள வெச்சா மாதிரி செம்ம குளிர். குருவியால பறக்கக்கூட முடியல அப்படியே விரைச்சு போய் மரத்தில இருந்து கீழே விழுந்துவிட்டது. நகரக்கூட முடியல. அப்ப அந்த பக்கமா ஒரு பசு மாடு வந்தது, அது குருவி இருக்கிறத பார்க்காம அது மேலேய சாணி போட்டுச்சு. குருவியால கத்த முடியல, சாணிக்குள்ள மாட்டிகிச்சு ஆனாலும் அப்பதான் போட்ட சாணிங்கறதனால கொஞ்சம் கதகதப்பா இருந்தது. குருவிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது, உடனே  ஜாலியா பாட்டுப் பாட ஆரம்பிச்சது. அப்ப அந்தப் பக்கமா ஒரு பூனை வந்தது, என்னடா சாணிக்குள்ள இருந்து பாட்டு வருதேன்னு சாணிய விலக்கிப் பார்த்தது, உள்ளே குருவி, அடுத்த நொடி பூனைக்கு சுடச்சுட குருவி பிரியாணி. 

குருவியின் கதை முடிந்தது, இந்த கதையும் முடிந்தது.


இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்:


1. உங்களை தாக்குபவர்களெல்லாம் உங்கள் எதிரிகள் அல்ல

2. உங்களை காப்பாற்றுபவர்களெல்லாம் உங்கள் நன்பர்கள் அல்ல

3. மூடிகிட்டு இருந்தா சாணியில கூட சந்தோஷமா இருக்கலாம்



பி.கு. - இந்த கதையை சொல்லியவர் ஓஷோ


இதுவே இன்றய நிலை. எல்லா நாட்டு அரசாங்களும் அவங்க மக்களை மூடிகிட்டு சும்மா இருங்கனு சொல்லுது. உலகத்திலேயே ரொம்ப கஷ்டமான வேலை சும்மா இருப்பதுதான்.


இதுவும் கடந்துபோகும் என்று நம்புவோம் - வேற வழி 

Friday, January 17, 2020

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !

ப்போது நான் குழந்தையாக இருந்தேன். வாளும் வேலும் கேடயமும் சிலநூறு வீரர்களையும் கொண்டிருந்த ஒருவரைக் காட்டி, இவர்தான் உனக்கும் இந்த சமஸ்தானத்துக்கும் அரசர் என்றார்கள். சரி என்றேன்.

அப்போது நான் சிறுவனாக இருந்தேன். எங்கிருந்தோ வாளும் வேலும் குதிரையும் கொண்டு படைதிரட்டி வந்த ஒருவன் என் அரசரின் தலையைக் கொய்து விட்டு இனி நான்தான் உங்களுக்கும் உங்கள் சிற்றரசுக்கும் அரசன் என்றான். சரி என்றேன்.

அப்போது நான் இளைஞனாக இருந்தேன். துப்பாக்கிகளும் பீரங்கியும் கொண்டு கப்பலில் வந்த வியாபாரிகள் என் அரசனைக் கொன்றுவிட்டு சிலரை அடிமையாக்கி நாங்கள் தான் உங்களுடைய அரசாங்கம், நம்முடைய பேரரசின் அரசி பிரிட்டிசில் இருக்கிறார் என்றார்கள். சரி என்றேன்.


அப்போது நான் குடும்பத்தலைவனாக இருந்தேன். நாம் விடுதலை பெற்றுவிட்டோம். இனி நாங்கள் தான் உனக்கும் நம் இந்தியாவுக்கும் அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.
வெடிகுண்டுகள் விமானங்கள் ஏவுகணைகள் கொண்டு நிறைய சண்டைகள் நடந்தது, கொலைகள் நடந்தது, கொள்ளைகள் நடந்தது. இந்தியா என்றார்கள் பாகிஸ்தான் என்றார்கள் பங்களாதேஷ் என்றார்கள் தனித்தனி நாடுகள் தனித்தனி அரசாங்கம் என்றார்கள். சரி என்றேன்.

இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். ஆவணங்கள் கேட்கிறார்கள். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள், நீங்களாக போர் புரிந்தீர்கள், எங்களைச்சுற்றி நீங்களாக எல்லைகளை மாற்றிக் கொண்டீர்கள். இப்போது மட்டும் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் ஆவணங்களை..? என்று கேட்டேன்.
துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முகாமுக்கு போகச்சொல்கிறார்கள். வேறு வழி என்ன இருக்கிறது. சரி என்று சொல்வதைத்தவிர..?

நன்றி : Samsu Deen Heera முகநூல் பதிவிலிருந்து…

Tuesday, December 10, 2019

எங்கே போகிறோம் ?

கல்வி முறையில் மாற்றம் தேவை. ஆண்களுக்கு தனியே பெண்களுக்கு தனி பள்ளி கல்லூரிகள் என்றில்லாமல் இருபாலரும் சேர்ந்து படிக்கும்படி இருக்கவேண்டும், இருபாலரிடையே பரஸ்பர புரிந்துனர்வு ஏற்படும்படியான சூழல் இருக்க வேண்டும், ஆசிரியர்கள் இதை ஊக்குவிக்கும்படியான செயல்கள் நடவடிக்கைகள் உருவாக்கவேண்டும் ஒன்றாக படித்தல், இசைத்தல், நாடகம் பேச்சுப்போட்டி விளையாட்டுக்கள் போன்றவை இருபாலரிடையே நல்ல புரிதலை உருவாக்கும். Moral Science என்று ஒரு பாடம் உண்டு இப்போது அது இருக்கிறதா இருந்தால் என்ன சொல்லித்தரப்படுகிறது என்று தெரியவில்லை.

இப்போது இருக்கும் ஊடகங்களின் வன்முறை மிக அதிகமாக இருக்கிறது. குழந்தைகளின் கார்ட்டூன் படத்தில் கூட வெட்டுவேன் குத்துவேன் என்றெல்லாம் வருகிறது கான்பிக்கவும் படுகிறது. தொலைகாட்சி தொடர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம் குடும்பத்தை எப்படி பிரிப்பது, பழி வாங்குதல், துரோகம் போன்ற எதிர்மறையான விஷயங்களே அதிகம் இடம்பெறுகிறது. மற்ற நிகழ்ச்சிகள் எல்லாமே திரைப்படம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவோ, மொழி, கலாச்சாரம், பன்பாடு, பாரம்பரியம் போன்றவற்றை பிரதிபலிக்கும் விதமாகவோ அல்லது மானவர்களின் கல்விக்கு உதவும் விதமாகவோ எந்த நிகழ்ச்சியும் இல்லை. மக்களின் சிந்தனை திறன் வளர/மேம்பட எதுவுமே இல்லை. தொலைக்காட்சிக்கு கண்டிப்பாக தணிக்கை முறை வேண்டும். ஏறக்குறைய எல்லா அலைவரிசைகளும் 24 மனி நேரமும் ஒலி/ஒளி பரப்புகின்றன இதை தடை செய்ய வேண்டும்.

கூட்டுகுடும்ப முறை அழிந்துவிட்டது, பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு போகவேண்டிய சூழலில் பிள்ளைகளின் போக்கு பெரும்பாலும் காலம் கடந்தபின் தான் தெரிகிறது. விளையாட்டு மைதானம் என்ற ஒன்று பள்ளிக்கூடத்தில்கூட இப்போது இல்லை.

திரைப்படங்களில் பள்ளிப் பிள்ளைகள் காதலிப்பது அல்லது காதலுக்கு துனை போவது போலெல்லாம் கான்பிக்கப்படுகிறது இதையெல்லாம் தடை செய்யவேண்டும். திரைப்படங்களுக்கு தணிக்கை இருந்தாலும் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது எல்லா வயதினரும் பார்க்க கேட்க நேரிடுகிறது. இதெல்லாம் முறைப்படுத்த நெறிபடுத்தவேண்டும்.

எங்கேயும் எப்போதும் எது வேண்டுமானாலும் கிடைக்கும்போது, எங்கேயும் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கும்.

நாம் விதைப்பதை நம் பிள்ளைகள்தான் அறுவடை செய்வர்.

அணைவரும் சமூக நலனையும் எதிர்கால சந்ததியினரை மனதில் கொண்டு நடந்திட வேண்டும்.

Tuesday, December 3, 2019

திரும்பி பார் - ஆனால் போகாதே

எல்லாப் பெரியவர்களுக்கும் தம் இளமைக் காலத்திற்குப் போக ஒரு ஆசை இருக்கிறது - குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம, கல்லூரி பருவம் இத்யாதி இத்யாதி (etc., etc.,)

எனக்கு அந்த ஆசை இல்லை, காரனம் வயது என்பது வெறும் ஆண்டுகளின் என்னிக்கையை குறிப்பது மட்டுமல்ல . அத்தனை வயது வரை சேர்த்து வைத்த அனுபவங்கள், அறிவு, ஞானம் - இவற்றின் தொகுப்பாகும். ஒரு குறியீடாகும். உன்மையில் போக முடிந்தால் இந்த தொகுப்போடு போனால்தான் அந்த வயதை/காலத்தை அனுபவிக்க முடியும், இல்லாவிட்டால் அந்த வயதில் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தோமோ அதை மறுபடியும் அனுபவிக்க வேண்டும்.

கஷ்டம் என்றால் ஒர் 5 வயது சிறுவன் 4+3 கூட்ட கஷ்டப்படுவதும், ஒரு 40 வயது ஆண் தன் குடும்பத்திற்கான் வரவு செலவு கனக்கு போட கஷ்டப்படுவதும் ஒன்றுதான்.

4ம் 3ம் எவ்வளவு என்று 5 அல்லது 6 வயது சிறுவர்களிடம்தான் கேட்பார்கள், 20 வயது பெரியவர்களிடம் கேட்கமாட்டார்கள் அதுபோலவே 245x435/443 எவ்வளவு என்று 5 வயது சிறுவர்களிடம் கேட்கமாட்டார்கள்

ஒவ்வொருவரும் அவரவர் வயதுகேற்ற கஷ்டங்களை அனுபவித்துதான் ஆக வேண்டும், இதுதான் வாழ்க்கை, திரும்பி போக நினைப்பது அவரை அவரே அவமதிப்பதுப் போலதான்.

நம்மை நாம் மதிக்கக் கற்றுக்கொள்வோம்

கடந்த காலம் நினைத்துப் பார்க்க நல்லா இருக்குமே தவிர மறுபடியும் வாழ்ந்து பார்க்க நல்லா இருக்காது.

Friday, January 24, 2014

அர்த்தமுள்ள வாழ்க்கை


குப்பன்: வாழுற வாழ்க்கையில ஒரு அர்த்தம் வேனும்.

சுப்பன்: யார் வாழ்க்கைக்கு வேனும்?

குப்பன்: எல்லார் வாழ்க்கைக்கும்தான்

சுப்பன்: யாருக்கு வேனும்?

குப்பன்: எல்லாருக்கும்தான்

சுப்பன்: என்னாய்யா சொல்ற? எல்லார் வாழ்க்கைக்கும் எல்லாருக்கும் அர்த்தம் வேணுமா? வேற ஒரு வேலையும் பார்க்க முடியாதே

குப்பன்: அதில்லைய்யா மனுசனா பொறந்தா ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கைய வாழனும்

சுப்பன்: அப்படித்தானே வாழ்த்துகிட்டு இருக்கோம்

குப்பன்: இல்லியே, ஏதோ பொறந்தோம், இருந்தோம், போனோம் இப்படித்தான வாழறோம், இதுல என்ன அர்த்தம் இருக்கு

சுப்பன்: வாழ்க்கையில அர்த்தம் இல்லைங்றியா, இல்லை உனக்கு தெரியலைங்கிறியா?

குப்பன்: இல்லைங்கறேன்

சுப்பன்: அது தப்பு, உனக்கு தெரியலைங்கறதுக்காக இல்லைன்னு சொல்லக்கூடாது. இங்கிருந்து பார்த்தா தெரு முனைல இருக்க வெத்தலை பாக்கு கடைகூட தெரியாது அதனால அந்த கடையே இல்லைன்னா சொல்லறது

குப்பன்: அப்படின்னா வாழ்க்கையோட அர்த்தம் என்ன?

சுப்பன்: எனக்கு தெரியாது

குப்பன்: அப்புறம் எப்படி அர்த்தம் இருக்குங்கற?

சுப்பன்: அதான் படைப்போட அடிப்படை விதி

குப்பன்: அப்படின்னா?

சுப்பன்: உன் பேனாவ கொஞ்சம் குடு சொல்றேன்

குப்பன்: இந்தா

சுப்பன்: இது ஒரு பேனா,  இது ஒரு 15cm நீளம் இருக்கு, ஒரு முனையில ஒரு button இருக்கு, இதை அழுத்துனா எழுதற பகுதி வெளிய வருது, இன்னொரு முனையில clip மாதிரி இருக்கு, இதுனால இந்த பேனாவ சட்டை பாக்கெட்ல குத்தி வெச்சுக்க முடியுது, இந்த பேனா எழுதறதுக்கு பயன்படுது இது நீல நிறத்தில எழுதுகிறது, இந்த பேனாவ பத்தி நான் சொன்னதெல்லாம் சரிதானே?

குப்பன்: ஆமா சரிதான்

சுப்பன்: நான் புதுசா எதுவும் சொல்லலை, இதெல்லாம் இந்த பேனாவ தயாரிச்சவர் ஏற்கனவே முடிவு பன்ன விஷயம்தான். அவர்தான் இந்த பேனா இப்படி இருக்கனும் முடிவு செஞ்சவர். இன்னும் சொல்லப்போனா, இந்த பேனா இப்படித்தான் இருக்கனும்னு முடிவு செஞ்ச அப்புறம்தான் இந்த பேனாவ அவர் தயாரித்திருப்பார். இந்த பேனா உருவாகிறதுக்கு முன்னாடியே இந்த பேனா எப்படி இருக்கனும், எதுக்கு பயன்படனும்னு என்பதெல்லாம் உருவாகிவிட்டது.  அதாவது இந்த பேனாவோட அர்த்தம் உருவாக்கபட்ட அப்புறம்தான் இந்த பேனாவே உருவாக்கப்படுது. இந்த பேனா மட்டுமல்ல, எல்லாமே ஒரு காரனத்திற்காக, ஒரு அர்த்தத்தோடுதான் படைக்கப்பட்டு இருக்கிறது

குப்பன்: அடேங்கப்பா

சுப்பன்: வரிகுதிரை தெரியுமா?

குப்பன்: ஆமாம் தெரியும்

சுப்பன்: அது என்ன கலர்'ல இருக்கு

குப்பன்: கறுப்பும் வெள்ளையும் கலந்து வரி வரியா இருக்கும்

சுப்பன்: அது ஏன் அப்படி இருக்கு?

குப்பன்: தெரியலியே

சுப்பன்: ஏன்னா?  வரிகுதிரையோட முக்கிய எதிரி சிங்கம், அதுக்கு நிறக்குருடு இருக்கு, வரிகுதிரையெல்லாம் கூட்டமா நிற்கும்போது, கூட்டத்தில இருக்க எந்த வரிகுதிரையும் சிங்கத்தோட கண்னுக்கு தெரியாது, ஏதாவது ஒன்னு கூட்டத்தவிட்டு தனியா வந்தாதான் சிங்கத்துக்கு பிரியானி

குப்பன்: அப்படியா?

சுப்பன்: ஒரு வரிகுதிரையோட படைப்புக்கே ஒரு அர்த்தம் இருக்கும்போது, மனுசன் பிறப்பிலா அர்த்தமில்லாம போகும்.

குப்பன்: ஆனா மனுசன் இப்ப வாழ்ற வாழ்க்கைய பார்த்தா அப்படி தோனலியே

சுப்பன்: அதுக்கு 2 விதமான காரனம் இருக்கு


-------தொடரும்

Friday, November 23, 2012

சோக்கு


ஒருத்தேன் அவன் மாமனார எருமைமாடு'ன்னு திட்டிட்டான், மாமனார் சும்மா விடுவாரா? பஞ்சாயத்து கூட்டிட்டார். நாட்டாமை இவன்கிட்ட "நீ உன் மாமாவை எருமைமாடுன்னு கூப்பிட்டது தப்பு, அதனால அவர்கிட்ட மன்னிப்பு கேக்கனும்"னு தீர்ப்பு சொல்லிட்டார்.

இவன் நாட்டாமைகிட்ட, "ஒரு சந்தேகம், நான் ஒரு எருமைமாட மாமா'ன்னு கூப்பிட்டா அது தப்பாகுமா?". நாட்டாமைக்கோ, மத்தவங்களுக்கோ இவன் ஏன் இப்படி ஒரு கேள்விய கேக்குறான்னு புரியலை. நாட்டாமை, "அதுல ஒரு தப்பும் இல்ல, அது உன் இஷ்டம்'னு சொன்னார். உடனே இவன் மாமனார் பக்கம் திரும்பி, "மாமா"ன்னு கூப்பிட்டான்.

என்னா குசும்புயா அவனுக்கு !!!

Corona aka Covid19

ஒரு ஊர்ல ஒரு மரம் இருந்தது அதுல நிறைய குருவிங்க வாழ்ந்துவந்தது. மழைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்க போகும் காலம். எல்லா குருவிங்கள...